பிளஸ் 2 பொதுத்தேர்வு: பெற்றோர்களிடம்  கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

by Editor / 02-06-2021 05:44:24pm
பிளஸ் 2 பொதுத்தேர்வு: பெற்றோர்களிடம்  கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


 சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின் பிளஸ் 2 தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார். 
மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதில் மாணவ ,மாணவிகளுக்கு இடையே இருவேறு கருத்துகள் நிலவி வருவதாக தெரிவித்த அவர், மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறினார். மாணவர்களின் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என அமைச்சர்தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via