ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

by Staff / 24-06-2024 05:10:36pm
ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாக்டியா மாகாணத்தின் ஜானிகைல் மாவட்டத்தில் உள்ள ஜகார்கோர் கிராமத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வீடு இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்தில் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பெரும்பாலும் மக்கள் மண் வீடுகளில் வசிப்பதால் இது போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும்போது அங்கு பாதிப்புகளும் அதிகமாக ஏற்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo