பள்ளி வாகனம் கண்மாயில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லக்கு ரோட்டில் அமைந்துள்ள சென் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாகனம் கண்மாயில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஐந்து சிறு குழந்தைகள் மற்றும் ஓட்டுநருக்கு சிறிய காயம்.. கோவில்பட்டி பல்லக்கு ரோட்டில் அமைந்துள்ள சென் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாகனம் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றி வருவதற்காக பாண்டவர்மங்கலம் சென்றுள்ளது இந்நிலையில் வாகனம் இடையில் பழுதானதால் வாகனத்தின் ஓட்டுனரான அச்சங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த சோலையப்பன் மகன் முத்துராஜ் (45) பழுதை சரி செய்து லேட்டாக வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு கண்மாய் கரை வழியாக வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக வாகனத்தை கரை ஓரமாக நிறுத்தியுள்ளார் இந்நிலையில் கரையில் இருந்த மண் சரிந்து வாகனம் கன்மாக்குள் விழுந்தது 15 குழந்தைகள் பயணித்ததில் டிரைவர் உட்பட ஐந்து குழந்தைகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டு அவர்களை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
Tags :



















