கேரள முன்னாள் வேளாண் துறை அமைச்சருமான பி.பி. தங்கச்சன் காலமானார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் வேளாண் துறை அமைச்சருமான பி.பி. தங்கச்சன் காலமானார். வயது மூப்பு தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், எர்ணாகுளம் ஆலுவாவில் நேற்று மாலை 4:30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மறைவையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பி.பி. தங்கச்சன், 1995-1996 வரை ஏ.கே.ஆண்டனி தலைமையிலான அரசில் வேளாண் துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
Tags : கேரள முன்னாள் வேளாண் துறை அமைச்சருமான பி.பி. தங்கச்சன் காலமானார்