அடையாளம் தெரியாத நபரால் வெட்டி படுகொலை

by Editor / 06-08-2022 05:35:51pm
அடையாளம் தெரியாத நபரால் வெட்டி படுகொலை

நெல்லை தச்சநல்லூரை அடுத்த பால்கட்டளை ஊரை சேர்ந்த வாலிபர் பேச்சிராஜன் இன்று காலை தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு அடையாளம் தெரியாத நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்,தகவல் அறிந்த காவல் ஆணையர் ,காவல் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்

கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி இறந்தவரின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்ய கோரி தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பதற்றம் நிலவியது,காவல் துறையினர் பெரும் போராட்டதுக்கு பின் இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் 

மேலும் இறந்தவரின் உறவினர்கள் பால்கட்டளை மதுரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் மேலும் அங்கு பதற்றம் ஏற்படாத வண்ணம் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கபட்டுள்ளனர்,ஊர் மக்கள் சாலை மறியலால் காவல்துறை போக்குவரத்தினை மாற்றி அனுப்பினர்

இறந்த பேச்சிராஜனுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடதக்கது

அடையாளம் தெரியாத நபரால் வெட்டி படுகொலை
 

Tags :

Share via