போராட்டக்களத்தில் திடீரென மயங்கி விழுந்த சீமான்
சென்னை திருவொற்றியூரில் அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மக்களை நேரில் சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார்.அந்த மக்களிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தபின்னர் பத்திரிகையாளர்களது சந்திப்பு முடிந்த நிலையில் அவர் தீடீரென மயங்கி விழுந்தார் என்றும் கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அவர் மயங்கி விழுந்ததும், அருகிலிருந்து நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், அவருக்கு முதலுதவி அளித்தனர். தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
Tags : திடீரென மயங்கி விழுந்த சீமான்















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
