கிணற்றில் மிதந்த சடலம் அதிர்ந்து போன போலீசார்

by Admin / 13-03-2022 12:52:09pm
கிணற்றில் மிதந்த சடலம்   அதிர்ந்து போன போலீசார்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி, காலஸ்தியான்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள விநாயகம் என்பவதுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று மதியம் மூன்று வயது இருக்கும் ஒரு பெண் குழந்தை சடலமாக கிடப்பதாக ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆற்காடு நகர போலீசார் மற்றும் ஆற்காடு தீயணைப்புத்துறையினர் அந்த அடையாளம் தெரியாத 3 வயது பெண் குழந்தையின் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது திடீரென அடையாளம் தெரியாத 35 வயது வயது இருக்கும் பெண்ணின் சடலம் அதே கிணற்றில் இருந்து மேலே எழும்பியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தீயணைப்புத்துறையினர் குழந்தை மற்றும் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் தாய்-மகள் சடலமாக கூட இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சுற்றுவட்டார பகுதியில் காணாமல் போன தாய் மகள் விவரங்களை சேகரித்து வரும் ஆற்காடு நகர போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via