உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் கைது இரண்டரை ஆண்டு சிறை தண்டனை

by Staff / 02-05-2022 04:38:57pm
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் கைது  இரண்டரை ஆண்டு சிறை தண்டனை

பிரபல டென்னிஸ் வீரரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முன்னாள் சாம்பியனுமான போரிஸ் பெக்கருக்கு சொத்து மற்றும் பணத்தை மறைத்த குற்றத்திற்காக லண்டன் நீதிமன்றம் இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவர் நீதிமன்றத்தில் திவாலானதாக அறிவித்து விட்ட நிலையில் பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதமாக மாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் மில்லியன் கணக்கான டாலர்களை மறைத்து வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜெர்மனியைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் 3 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டமும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றவர் ஆவார். உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீர ராகவும் இருந்தார். 

 

Tags :

Share via

More stories