நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு மேலும் 40 ரூபாய் உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி

by Staff / 02-05-2022 04:41:47pm
நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு மேலும் 40 ரூபாய் உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி

திருப்பூரில் 1000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பின்னலாடை உற்பத்தியில மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் வியாபாரிகள் குழப்பமடைந்துள்ளனர். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாகவே நூலின் விலை அதிகரித்து வரும் நிலையில், நடப்பு மாதத்திற்கான நூல் விலையும் கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via