தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் “மோடியை கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்” - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. வெளிநாடுகள் செல்லும்போது திருக்குறள் கூறும் பிரதமர், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி அமைக்க நீதிமன்றம் கூறியதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இவற்றை எல்லாம் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்”என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
Tags :