கொரோனா பாதிப்பு: மூத்த காங்கிரஸ் தலைவர்  ஏக்நாத் கெய்க்வாட்மரணம் 

by Editor / 28-04-2021 04:03:53pm
 கொரோனா பாதிப்பு: மூத்த காங்கிரஸ் தலைவர்  ஏக்நாத் கெய்க்வாட்மரணம் 

 


 கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மூத்த காங்கிரஸ் தலைவர்
 ஏக்நாத் கெய்க்வாட் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த தலைவருமாக ஏக்நாத் கெய்க்வாட் (81) கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மும்பை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை மருத்துவமனை உறுதி செய்துள்ளது.
ஏக்நாத் கெய்க்வாட் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஏக்நாத் கெய்க்வாட் மும்பை மக்களவையில் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மகாராஷ்டிரா மாநலி அமைச்சரவையில் பல ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றியவர். மேலும், காங்கிரஸ் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர் தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்டின் தந்தை ஆவார்.
 

 

Tags :

Share via