இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவியது சிங்கப்பூர்

கடந்த ஆண்டு, தொற்று பாதிப்புகளில் சிங்கப்பூருக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருள்களை அனுப்பி வைத்து இந்தியா உதவியது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் இந்தியா போராடி வருகிறது. இந்த தருணத்தில் இந்தியாவுடன் நாங்கள் துணைநிற்போம் என்று தெரிவித்த சிங்கப்பூர் அரசு, கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க உதவும் 256 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ பொருள்களை வழங்கி இந்தியாவுக்கு உதவியுள்ளது சிங்கப்பூர்.
ஆக்சிஜன் ஏற்பட்ட அந்நாட்டு விமானப்படையின் சி-130 ரக இரு விமானங்களை சிங்கப்பூர் அமைச்சர் மாலிகி ஓஸ்மான் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
கரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் 15 நாடுகள் முக்கியமான அவசர மருத்துவ உபகரணங்களை விரைந்து வழங்கி உதவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Tags :