காவேரி நதிநீர் விவகாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை.

by Editor / 03-07-2023 09:33:52am
காவேரி நதிநீர் விவகாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை. காவிரியின் குறுக்கே அணை கட்டப் போவதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சென்னை விமான நிலையத்தில் துரைமுருகன் நேற்று கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் ஆலோசனை நடத்த இருக்கிறோம் என்றார்.
 

Tags :

Share via

More stories