by Editor /
03-07-2023
09:07:08am
தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் இங்கு உள்ள அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. அருவிகளில் குளிப்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர் இந்த நிலையில் ஜூன் மாதம் முடிந்தும் தென்மேற்கு பருவமழை இந்த பகுதியில் வலுப்பெறாமல் இருந்து வருவதின் காரணமாக இங்கு உள்ள அருவிகளுக்கு நீர்வரத்து என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று இரவு முதல் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது இந்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது இதன் தொடர்ச்சியாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி கொட்டியதின் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் சீசன் காலம் என்பதால் குளிப்பதற்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்ற நிலையில் தற்போது குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags :
Share via