சிறுவர்கள் கடத்தல்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்
செங்கல்பட்டு ஒழலூரில் பள்ளியில் இருந்து வெளியே வந்த சிறுமி, சிறுவன் நேற்று கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிறுவர்களின் தாய் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தாய், தந்தை பிரிந்து வாழும் சூழலில் தாய் தனது குழந்தைகளை, நண்பர்கள் மூலம் காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. நேற்று மாலை சிறுவர்கள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி அப்பகுதி பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
Tags :