குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Editor / 17-01-2022 08:32:20pm
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


 

 

Tags :

Share via
Logo