முலாயம் சிங் யாதவ் இறுதிச் சடங்கில் முக்கிய தலைவர்கள் பங்கேற்ப்பு

by Editor / 11-10-2022 09:36:41pm
முலாயம் சிங் யாதவ்  இறுதிச் சடங்கில் முக்கிய தலைவர்கள் பங்கேற்ப்பு

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக அயானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மரணம் அடைந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடைபெற்றது. பின்னர், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தயாரும் சமாஜவாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags : Mulayam Singh Yadav cremated with full state honours

Share via