சாமானிய மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிப்பு:

by Editor / 13-08-2023 11:26:11pm
சாமானிய மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிப்பு:

டெல்லியில் செங்கோட்டை அருகே வருகின்ற 15 தேதி நடைபெறும் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் மீனவ சமுதாய தலைவர்கள், விவசாயிகள், செவிலியர், ரோடு போடும் தொழிலாளர்கள், கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் உள்ளிட்ட சாமானிய மக்களின் பிரதிநிதிகள் மத்திய அரசு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கௌரவிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து தேசிய மீனவர் பேரவையின் அகில இந்திய தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா. இளங்கோ மத்திய பாதுகாப்பு துறை அழைப்பின் பேரில் மனைவி பூங்குழலியுடன் டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

மத்திய அரசு சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது நாடு முழுவதும் இருந்து மீனவ சமுதாய தலைவர்கள் 50 பேர்கள் கணவன் மனைவி இருவரும் பங்கேற்க வருகை தர சிறப்பு விருந்தினர் காண அழைப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

விழாவில் பங்கேற்கும் மீனவ சமுதாய பிரதிநிதிகளின் விமான பயணச் செலவு தங்குமிடம் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செலவினங்களையும் மத்திய மீன்வளம் கால்நடை மற்றும் பால்வள அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் சுதந்திர தின 75 வது சுதந்திர தின விழா முதல் வருகின்ற 15 தேதி வரை 2 ஆண்டுகளாக சுதந்திர தின வைர விழாவினை நாட்டின் அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வரும் மத்திய அரசு இந்த 2 ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அண்டை நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து நெடுஞ்சாலை வசதி புதிய பாராளுமன்ற கட்டிடம் போன்ற அதிநவீன கட்டுமான பணிகள், வேளாண் உணவு உற்பத்தி அமைப்புகள், மீன்பிடி உணவு உற்பத்தி அமைப்புகள், பிரதமரின் விவசாயிகளுக்கான உதவி திட்டம் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சாதாரண தொழிலாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், வேளாண் மற்றும் மீன் உணவு உற்பத்தி நிறுவன தலைமை நிர்வாகிகள், ஒளிர்மிகு கிராமங்களை நிர்வகிக்கும் பஞ்சாயத்து தலைவர்கள், செவிலியர்கள், கட்டிடக்கலை தொழிலாளர்கள், போன்ற நாட்டு வளர்ச்சியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வரும் சாமானிய மக்களின் பிரதிநிதிகளை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு விழாவிற்கு அழைத்து அவர்கள் கௌரவிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய மீனவர் பேரவை தலைவர் மா. இளங்கோ தன் மனைவியுடன் திங்கள் கிழமை காலை விமான மூலம் சென்னையில் இருந்து புது டெல்லி புறப்பட்டு செல்கிறார்

 

Tags : சாமானிய மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிப்பு:

Share via