சமூக வலைத்தள தகவலை நம்பி இயற்கை மருந்து சாப்பிட்ட இருவரில் ஒருவர் பலி

ஆம்பூரில் சமூக வலைதளங்களில் வந்த தகவலை நம்பி செங்காந்தள் பூ செடியின் கிழங்கை மருந்து என நினைத்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் என்பவரும், ரத்தினம் என்பவரும் செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைதளங்களில் வந்த செய்தியை நம்பி சாப்பிட்டுள்ளனர்.
இதனால் இருவருக்கும் திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் லோகநாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தினம் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவர் பரிந்துரை அன்றி சமூக வலைதளங்களில் வரும் செய்தியை நம்பி மருந்து உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Tags :