அமெரிக்காவில் ஒரே நாளில்  1,836 பேர் கொரோனாவுக்கு பலி

by Editor / 29-09-2021 03:38:34pm
அமெரிக்காவில் ஒரே நாளில்  1,836 பேர் கொரோனாவுக்கு பலி



அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவாக 1,836 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தரப்பில் கூறியிருப்பதாவது:


“அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,836 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்த நிலையில், 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் டெல்டா வைரஸ் காரணமாகவே கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகரித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழப்பு ஏற்படுவது மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா தனது குடிமக்களில் 75% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய 65 வயதைக் கடந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கும் 3வது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதி வழங்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories