பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

by Staff / 11-03-2024 04:48:46pm
பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம்,   சூரங்குடி அருகிலுள்ள பல்லாக்குளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் - பழனியம்மாள் தம்பதியரின் மகள் ஜான்சி ராணி (17). இவர் குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொணடு இருப்பார்களாம். இதனை ஜான்சி ராணி பல தடவை கண்டித்தும் அவர்கள் சண்டை போடுவதை நிறுத்தவில்லையாம்.மேலும் தற்போது பொதுத் தேர்வு நடைபெறுவதால் அவர் படிக்க முடியாமல் மன வேதனையில்  இருந்தாராம். இந்நிலையில் நேற்று இரவு அவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு வெங்கடேஸ்வர பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories