பராமரிப்புப் பணிகள்:வேளாங்கண்ணி - கோவா ரயில் ரத்து

by Editor / 11-12-2022 08:26:29am
பராமரிப்புப் பணிகள்:வேளாங்கண்ணி - கோவா ரயில் ரத்து

சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயில், வரும் டிச. 13 மற்றும் டிச. 20 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம், ஈரோடு, கரூா், திருச்சி வழியாக, வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா (கோவா) இடையே இரு மாா்க்கத்திலும் வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாஸ்கோடகாமா (கோவா) ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு, இரு மாா்க்கத்திலும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. வரும் டிச. 12 மற்றும் டிச. 19-ஆம் தேதிகளில், வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (எண்: 17315) ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கத்தில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து வரும் டிச. 13 மற்றும் டிச. 20 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா வாரந்திர விரைவு ரயில் (எண்: 17316) ரத்து செய்யப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via