திருவாரூர் மத்திய பல்கலை.  துணைவேந்தர்முத்துகலிங்கன் கிருஷ்ணன் நியமனம்

by Editor / 24-07-2021 06:05:21pm
திருவாரூர் மத்திய பல்கலை.  துணைவேந்தர்முத்துகலிங்கன் கிருஷ்ணன்  நியமனம்



12 மத்தியப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாகத் துணைவேந்தர்களை நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய துணைவேந்தர்கள் பட்டியல்:


ஹரியானாவில் பேராசிரியர் தங்கேஸ்வர் குமார்இமாச்சலப் பிரதேசத்தில் பேரா. சத் பிரகாஷ் பன்சால்ஜம்முவில் முனைவர் சஞ்சீவ் ஜெயின்ஜார்க்கண்டில் பேரா. ஷித்தி பூஷன் தாஸ்கர்நாடகத்தில் பேரா‌. பட்டு சத்யநாராயணா, தமிழ்நாட்டில் பேரா. முத்துகலிங்கன் கிருஷ்ணன் தெலங்கானாவில் முனைவர் பாசுத்கர் ஜே ராவ்தெற்கு பிகாரில் பேரா. காமேஸ்வர் நாத் சிங்,வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தில் பேரா.

பிரபா ஷங்கர் சுக்லா,குரு காஷிதாஸ் பல்கலைக்கழகத்திற்கு முனைவர் அலோக் குமார் சக்ரவால்,மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்திற்கு பேரா. சையத் ஐநுல் ஹாசன்,மணிப்பூர் பல்கலைக்கழகத்திற்கு பேரா. என் லோகேந்திர சிங் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிவரும் முத்துகலிங்கன் கிருஷ்ணன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.அவர் பணியில் இணையும் நாளிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கோ அல்லது அவருக்கு 70 வயது ஆகும் வரையிலோ துணைவேந்தராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 28 ஆண்டுகளாகப் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via