தண்ணீர் அண்டாவில் விழுந்து  ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

by Editor / 28-07-2024 12:14:19am
தண்ணீர் அண்டாவில் விழுந்து  ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

திருவட்டாரை அடுத்துள்ள கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் நிம்மி ஜோஷி (30). இவரது கணவர் லியோ பிரவீன் இவர்களுக்கு ஒன்றரை வயதில் கெவின் சுமித் என்ற ஆண் குழந்தை உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். நிம்மி ஜோஷி தனது குழந்தையுடன் கல்லங்குழியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகறார். அவர் நாகர்கோவிலில் உள்ள ஐ டி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.  

நேற்று காலை வழக்கம் போல் குழந்தையை தாயார் மேபல் ரூபியிடம் விட்டுவிட்டு நிம்மி ஜோஷி வேலைக்கு சென்றார். குழந்தை வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டு இருந்தது.

    இந்நிலையில் சிறிது நேரமாக குழந்தையின் சத்தம் கேட்காததால் மேபல் ரூபி வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த தண்ணீர் பாதியளவு நிரம்பிய சில்வர் அண்டாவில், குழந்தை தலைகுப்புற விழுந்து கிடந் துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு கொண்டு சென்றார்.

     அங்கு பரி சோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நிம்மி ஜோஷி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : தண்ணீர் அண்டாவில் விழுந்து  ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Share via

More stories