முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து

by Staff / 01-03-2023 11:31:45am
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில், அவருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வினியோகித்து வருகின்றனர்.

 

Tags :

Share via