நாகாலாந்தில் இன்று மறு வாக்குப்பதிவு

by Staff / 01-03-2023 11:28:06am
நாகாலாந்தில் இன்று மறு வாக்குப்பதிவு

நாகாலாந்து மாநிலத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடந்தது. இன்று மீண்டும் நான்கு வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நான்கு வாக்குச்சாவடி மையங்களிலும் பல்வேறு காரணங்களால் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. ஜுன்ஹெபோடோ தொகுதியில் உள்ள நியூ காலனி, சான்சிஸ் தொகுதியில் பங்டி, திஜித் தொகுதியில் ஜபோகா மற்றும் டோனோகியூ தொகுதியில் பாத் சோ ஈஸ்ட் விங் ஆகிய இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

Tags :

Share via