ஈரான் தன் வான் பரப்பை பாதுகாக்கும் வகையில் புதிய கருவியை நிறுவியுள்ளது.

by Admin / 01-11-2024 04:55:11pm
ஈரான் தன் வான் பரப்பை பாதுகாக்கும் வகையில் புதிய கருவியை நிறுவியுள்ளது.

ஈரான் தன் வான் பரப்பை பாதுகாக்கும் வகையில் புதிய கருவியை நிறுவியுள்ளது. இஸ்ரேல் தன் வான்வழி பரப்பில் அது நவீனமான ஏவுகணை ட்ரோன் அணுகுண்டு உள்ளிட்ட எதிரி நாடுகளால் செலுத்தப்படுகிற போர் கருவிகளை தடுத்து இருக்கும் விதமாக அயன்டோம்-ஒரு இரும்பு கோட்டை போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளது .அதேபோன்று இப்பொழுது ஈரானும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக 360° சுழலும் தன்மையுடைய ஏவுகணை தடுப்பு அரணை தன் வான் வழியில் அமைத்துள்ளது. இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பின்பு இஸ்ரேலால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில் அவசரமாக ஈரான் இந்த வான்வழி பாதுகாப்பு கருவியை பொருத்தி உள்ளது. இது எந்த அளவிற்கு திறன் கொண்டது என்பது சோதித்து அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.. இருப்பினும் ,இது பாதுகாப்போடு தான் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo