.4,000 பணப்பட்டுவாடா - அதிமுக புகார்

by Staff / 27-02-2023 02:00:48pm
.4,000 பணப்பட்டுவாடா - அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் 2 வாக்குச்சாவடிகள் அருகே பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இந்தப் புகாரை அளித்துள்ளார். அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4,000 விநியோகம் செய்யப்படுவதாகவும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உதவியாளர்கள் வீடு வீடாகச் சென்று பணம் விநியோகிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via