ராகிங் எதிர்ப்பு திட்டம் குறித்து காவல் துறையின் மூலம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குவிழிப்புணர்வு
ராகிங் எதிர்ப்பு திட்டம் குறித்து காவல் துறையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகதிண்டுக்கல் மாவட்டத்தில் ராகிங் எதிர்ப்பு திட்டம் குறித்து காவல் துறையின் மூலம்பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. . இந்நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர்.எல்.ராதாகிருஷ்ணன் சீதாலட்சுமி, தலைவர், வேளாண்மை மற்றும் மாணவர் நலத்துறை, நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.நாகமணி மற்றும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ராகிங் எதிரான உறுதிமொழி மேலும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மாணவர்களுக்கு ராகிங் செய்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் சிறப்புரை வழங்கினார்.. இனிவரும் காலங்களில் ராகிங் செய்து, ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின் அவர்களால் எந்தவொரு கல்லூரிலும் பல்கலைக்கழகத்திலும் படிக்க முடியாது. எனவே | மாணவர்கள் ராகிங் தவிர்த்து, படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கினார்.
Tags :