வாகனங்களுக்கு சாலை தெரியாத வண்ணம்கொசு மருந்தை அடித்தது போல சென்ற பேருந்து

by Admin / 14-08-2023 08:27:36pm
வாகனங்களுக்கு சாலை தெரியாத வண்ணம்கொசு மருந்தை அடித்தது போல சென்ற பேருந்து

வடிவேலு கொசு மருந்து அடித்த பாணியில் சென்ற கோவில்பட்டி அரசு பேருந்து. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பேருந்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர

தமிழ் திரைப்படம் ஒன்றில் வடிவேலு தெருக்களில் கொசு மருந்து வாகன மூலம் தெளித்து வந்தார் இதே போல ஒரு காட்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணிமனை இருந்து தினமும் 70-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றனர். அதில் இன்று கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து  திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் இங்கி வருகிறது. இந்தப் பேருந்து கோவில்பட்டி பணி மனையிலிருந்து கிளம்பி திருநெல்வேலிக்கு சென்றது. அப்பொழுது பேருந்தில் இருந்து அதிக அளவிலான புகை வெளியேறி எதிரே மற்றும் பின்னால் செல்லும் வாகனங்களுக்கு சாலை தெரியாத வண்ணம் காட்சியளித்தது. கொசு மருந்தை அடித்தார் போல சென்றது. இதனை பின்னால் மற்றும் எதிரே வந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் உடனடியாக இந்த பேருந்தை கோவில்பட்டி பணிமனை மேலாளர் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

வாகனங்களுக்கு சாலை தெரியாத வண்ணம்கொசு மருந்தை அடித்தது போல சென்ற பேருந்து
 

Tags :

Share via