பெண் கைதி தப்பியோடிய விவகாரம்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருவாரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வயிற்று வலி காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிட்டார்
அதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் கஸ்தூரியின் மகள் வீட்டில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலை காவலர்கள் சத்தியா மற்றும் கோமதி ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவு
Tags : Female prisoner escapes case: 2 guards fired