அக். 16-ம் தேதி காங்கிரஸ்  காரியக் கமிட்டிக் கட்டம் கூடுகிறது 

by Editor / 09-10-2021 05:21:57pm
அக். 16-ம் தேதி காங்கிரஸ்  காரியக் கமிட்டிக் கட்டம் கூடுகிறது 

காங்கிரஸ் கட்சியின் ம் காரியக் கமிட்டிக் கட்டம் வரும் 16-ம் தேதி டெல்லியில் கூடுகிறது.  தலைவர் பதவிக்கான தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.


டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த காரியக் கமிட்டிக் கூட்டம் நடக்க உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்பர். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை என்று ஜி-23 தலைவர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,


காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. 
கடந்த முறை நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில்,  2-வது அலையைக் காரணம் காட்டி, உட்கட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிவைக்கப்பட்டது, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான தேதியும் குறிக்கப்படவில்லை. ஆதலால், வரும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும், எப்போது முடியும் என்பதுதான் பிரதானமாகப் பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்பாரா, அல்லது தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடுவாரா எனத் தெரியவில்லை. ஆனால், இந்திய தேசிய மாணவர் அமைப்பு, மகிளா காங்கிரஸ், காங்கிரஸ் சமூக வலைதளம் ஆகியவை அடுத்த தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

 

Tags :

Share via