தங்க கடத்தல் நடிகையை விவாகரத்து செய்யும் கணவர்?

by Editor / 02-04-2025 03:26:38pm
தங்க கடத்தல் நடிகையை விவாகரத்து செய்யும் கணவர்?

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை விவாகரத்து செய்ய அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. தங்கக் கடத்தலில் நடிகை சிக்கி இருப்பதால் கணவர் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் கைதானது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via