காரசார முட்டை போண்டா-
காரசார முட்டை போண்டா- தமிழ் நாட்டு உணவுகள் என்றாலே காரசாரம் அதிகமிருக்கும் என்பது தான்பொதுவாகச்சொல்லப்படுவது..சில உணவுகள் காரம் கொஞ்சம் குறைந்தாலே சாப்பிடத்தோணாது.சில வகைகளில்மிதமானதிலிருந்து கொஞ்சம் தூக்கலாக இருந்தால் மளமளவென்று சாப்பிடத்தோன்றும்.அதுவும் மாமிச உணவுஎன்றால் கண்ணிலிருந்து தரதரவென கண்ணீர் வடியவேண்டும் அப்பொழுதுதான் ,அந்த சாப்பாட்டின் தனித்துவமே வெளிப்படும்.முட்டையில் ,எத்தனையோ விதமான நிலைகளில் செய்திருப்போம்.முட்டை பொறியல்,ஆம்லெட்,ஆப்ஆயில்,முட்டை மசால்,அவித்த முட்டை ,முட்டை போண்டா என ...ஆனால்,காலத்திற்கு தக சில மாறுதல்களை சமையலிலும் செய்ய
வேண்டியுள்ளது.அந்த வகையில், முட்டை போண்டாவை கொஞ்சம் மாற்றிப்பார்க்கலாம்.முட்டை -6 வேகவைத்து உரித்தஉருளைக்கிழங்கு-4 தனியா-ஒரு கரண்டி,சீரகம்,மிளகாய்,கறிமசாலா தூள்,வெங்காயம்மிளகாய்,இஞ்சி,பூண்டு,மக்கா சோளமாவு,கொத்தமல்லி,தழை,ரொட்டித்தூள்,தேவையான உப்பு வேகவைத்த உருளைகிழங்கின் தோல் நீக்கி ,நன்றாக கையால் மசித்துக்கொள்ளவும் வேகவைத்த முட்டை தோல்உரித்து வைத்துக்கொள்ளவும்.தனியா,சீரக.காய்ந்த மீளகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்து தூளாக்கி..அதனோடுநறுக்கி வைத்த வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழை ,தனியா,மஞ்சள் தூள்,கறிமசாலா பொடி,தேவையானஉப்பு சேர்த்து மசிய வைத்த உருளைக்கிழங்குடன் வாணலியில் ,மிதமான வெப்பத்தில் எண்ணெயில் வதக்கி எடுத்து,மற்றொரு பாத்திரத்தில் போட்டு மூன்று முட்டைகளை உடைத்து விட்டு,அதில் கான் ப்ளார் மாவு,மிளகு தூள்,உப்புசேர்த்து நன்றாக கலந்து ,அதில் வேக வைத்த முட்டையை முழுதாகவோ,பாதியாக வெட்டி எடுத்தோ மசாலவோடு உருட்டி எடுத்து ,கொதிக்கும் எண்ணெய் போட்டு எடுக்கவும் .இப்பொழுது,முட்டை போண்டா தயார்.
Tags :