77 வது சுதந்திரத்தினவிழா குடியரசுதலைவர் வாழ்த்து.

by Editor / 14-08-2023 10:54:26pm
77 வது சுதந்திரத்தினவிழா குடியரசுதலைவர் வாழ்த்து.

இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா  நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அந்த உரையில், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய குடிமகன் என்பது எல்லாவற்றிற்கும் மேலானது. சுதந்திர தினம் என்பது நமது அடையாளங்களை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. ஒவ்வொரு இந்தியரும் சமமானவர்கள் இந்த மண்ணில் சம வாய்ப்பு, உரிமைகள் கடமைகள் உள்ளன. கொரோனா உள்ளிட்ட கடினமான சூழலில் அனைத்து தரப்பினருக்கும் உத்வேகமாக இந்தியா திகழ்ந்தது'' என தெரிவித்துள்ளார்.

 

Tags : குடியரசுதலைவர்

Share via
Logo