அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

by Staff / 25-09-2023 05:15:56pm
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via