ஜுலை 14-ல் திமுக எம்பிக்கள் கூட்டம்

by Staff / 10-07-2023 03:14:16pm
ஜுலை 14-ல் திமுக எம்பிக்கள் கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜுலை 20ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் எம்பிக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் பொது சிவில் சட்டம், ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரங்கள் குறித்து பேசப்படும் என தெரிகிறது.
 

Tags :

Share via