தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவு
டெல்லியில் நேற்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 15 நாள் தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் தமிழ்நாட்டில் பிலிகுண்டுலு பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதோடு கர்நாடக மாநிலத்தில் மழைப்பொழிவு இல்லாததால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும் குடிநீர் தேவைக்கே பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறி கர்நாடகத்தில் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக சார்பில் முன்னாள் முதல்வரும் போராட்ட களத்தில் குதித்துள்ளார். அங்குள்ள நிலைமை சாதகமான சூழலில் இல்லாததன் காரணமாக ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக முதலமைச்சர் சிவகுமாரை சந்திக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Tags :


















