அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த இளைஞர் பலி

சென்னையில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞர் எட்வின் உயிரிழந்துள்ளார். முன்பகை காரணமாக எட்வினை அரிவாளால் வெட்டிய எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சஞ்சய் தற்போது சிறையில் உள்ளார். கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி எண்ணூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :