மீஞ்சூரில் ரவுடி மாமூல் கேட்டு மிரட்டிய ஐந்து பேர் கைது.

by Staff / 25-02-2023 02:35:00pm
மீஞ்சூரில் ரவுடி மாமூல் கேட்டு மிரட்டிய ஐந்து பேர் கைது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரியன்வாயல் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக்பாஷா, இவர் மீஞ்சூர் பஜாரில் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று சித்திக்பாஷாவுக்கு தேவராஜ் என்பவர் போன் செய்து தனக்கு ரவுடி மாமூல் கொடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் போட்டு தள்ளிவிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். பக்கத்து கடைக்காரர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து மாமூல் கொடுக்கிறார்கள் எனவே நாளை எனது கூட்டாளிகள் வருவார்கள் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து அனுப்பு. இல்லை என்றால் கடையை திறக்க மாட்டாய் என மிரட்டியுள்ளார். அன்றிரவு ஐந்து பேர் கடைக்கு வந்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். வியாபாரத்திற்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டேன் என்றதும் நாளை வருவோம் பணம் கொடுக்கவில்லை என்றால் போட்டு தள்ளிவிடுவோம் என கூறிச் சென்றனர். இதனால் மீஞ்சூர் வியாபாரிகள் நல சங்கத்தில் தெரியப்படுத்தி மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட மீஞ்சூர் காவல்துறையினர் ரவுடி மாமூல் கேட்டு கொலை மிரட்டலில் ஈடுபட்ட முகேஷ், தீபக், சந்தோஷ், கண்ணன், சரத்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சரத்ராஜ் என்பவர் 17 வயது சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்திற்கு மூலையாக செயல்பட்ட தேவராஜ் தலைமறைவாகியுள்ளார்.

 

Tags :

Share via

More stories