கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆம்னி பஸ்கள் - அபராதம் விதித்த அரசு

by Staff / 15-04-2022 03:50:50pm
 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆம்னி பஸ்கள் - அபராதம் விதித்த அரசு

கடந்த 13 மற்றும் 14 என இரண்டு நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்தனர். சென்னையில் இருந்து அரசு பேருந்துகள் மட்டுமில்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது.  கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகளிடம் புகார் வந்தது. 

 புகாரின்  அடிப்படையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறப்பு குழுக்களாக ஆய்வு செய்ததில் கூடுதல் கட்டணம் வசூலித்தது, சில பேருந்துகள் உரிய ஆவணம் இல்லாமல் இயக்கியது, போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாத நிலை போன்றவை ஆய்வில் தெரிய வந்தது.

இதில் விதிகளை மீறி இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளனர். இதில் சென்னையில் வடக்கு மண்டலத்தில் 167 பஸ்கள், தெற்கு மண்டலத்தில் 75 பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கி இருக்கின்றனர்.

 பயணிகளிடம் கூடுதலாக வசூலித்த 22,200 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via