போதை இளைஞர் தள்ளிவிட்டதில் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் உயிரிழந்தார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி [69] ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்.. இவர், இரவு தனது வீட்டின் அருகே போதையில் படுத்திருந்த இளைஞரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர் அவரை கீழே தள்ளி விட, பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து போதை இளைஞர் சிவராமன் (29) என்பரை போலீசார் கைது செய்தனர்.
Tags :