மக்களுக்கு பணத்தை வாரி வழங்கிய தொழிலதிபர்

by Staff / 16-04-2024 11:03:19am
மக்களுக்கு பணத்தை வாரி வழங்கிய தொழிலதிபர்

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பவேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்த ரூ.200 கோடியை மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். நேற்று (ஏப்ரல் 15) வாகனத்தில் ஊர்வலமாக சென்ற தம்பதி பணக் கட்டுகளை மக்களை நோக்கி வீசியபடி சென்றனர். அப்போது, அவர்களைச் சுற்றி இருந்த மக்கள் ஆர்வமாக அந்த பணத்தைப் பெற்றுச் சென்றனர். இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. துறவு வாழ்க்கைக்கு செல்லவுள்ள நிலையில் தங்களது பணத்தை மக்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via