அன்புக்கரங்கள்” திட்டம் இன்று தொடக்கம்.

by Staff / 15-09-2025 09:45:48am
அன்புக்கரங்கள்” திட்டம் இன்று தொடக்கம்.

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று  (15.09.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றுகிறார்கள்.மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  
பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ / மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குகிறார்.

 

Tags : அன்புக்கரங்கள்” திட்டம் இன்று தொடக்கம்.

Share via