கோவில்பட்டியில் மதுபோதையில் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த- ராகுல் காந்தி. 

by Staff / 15-09-2025 09:50:28am
கோவில்பட்டியில் மதுபோதையில் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த- ராகுல் காந்தி. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வண்ணா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (57), கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகன் ராகுல் காந்தி (27). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தந்தை மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், இருவரும் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே முனியசாமி பாட்டிலை உடைத்து ராகுல் காந்தியை குத்த முயன்றதாகவும், மேலும் அவரது கையை முனியசாமி கடித்து வைத்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த முனியசாமி அங்கேயே படுத்து உறங்கி விட, ஆத்திரத்தில் இருந்த ராகுல் காந்தி, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து முனியசாமி கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  கையில் காயத்துடன் இருந்த முனியசாமி  கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் அங்கிருந்த காவலர் ஒருவரிடம் வீட்டில் நடந்தது கூறிவிட்டு நேரடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று தனது தந்தையை கொலை செய்துவிட்ட விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியசாமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி அதிக மது போதையில் இருப்பதால் போலீசாரால் தொடர்ந்து விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது. போதை தெளிந்த பிறகு தான் விசாரணை நடத்தி தந்தையை ஏன் கொலை செய்தார் என்பது குறித்து விசாரிக்க  முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags : கோவில்பட்டியில் மதுபோதையில் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த- ராகுல் காந்தி. 

Share via