உக்ரேன் நகரில் மனிதாபிமான உதவிகளை பெற நீண்ட வரிசையில் நிற்கும் மக்களை

உக்ரைன் நாட்டின் மாரியு போல் நகரில் மனிதாபிமான உதவிகளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த நகரில் ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த நகரம் முற்றிலுமாக அழிந்து போன நிலையில் உள்ளது அங்கு வசிக்கும் மக்கள் உணவு இருப்பிடம் குடிநீர் உள்ளிட்டவை எவ்வித அடிப்படை வசதியும் இன்றி அல்லல்பட்டு வருகின்றனர். அந்த நகரிலிருந்து வாகனங்கள் மூலம் வெளியேறும் வழிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நடந்து சென்றால் மட்டுமே அந்நகரில் இருந்து வெளியேறமுடியும் என்ற நிலமை உள்ளதாக உக்ரேன் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
Tags :