தனியார் மற்றும் அரசு சொத்துக்கள் சேதம்-தவெக நிர்வாகிகள் 7 பேர் மீது வழக்குப்பதிவு.
தலைவர் விஜய் நேற்று முன்தினம் (செப்.13) திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பிரச்சார நிகழ்ச்சியின் போது தனியார் மற்றும் அரசு சொத்துக்கள் சேதமடைந்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிமீறல்கள் நடந்ததாக நிர்வாகிகள் 7 பேர் மீது கண்டோண்மென்ட், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் ஆகிய 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : தனியார் மற்றும் அரசு சொத்துக்கள் சேதம்-தவெக நிர்வாகிகள் 7 பேர் மீது வழக்குப்பதிவு.



















