அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா சிலைக்கு மாலையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா சிலைக்கு மாலையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன்திண்டுக்கல்சீனிவாசன், கே பி . முனுசாமி, எஸ்.பி. வேலுமணி,ராஜேந்திர பாலாஜி, காமராஜ் நத்தம், விஸ்வநாதன், தம்பிதுரை,கோகில இந்திரா தங்கமணி, ஜெயக்குமார், ,பொன்னையன், நடிகை கௌதமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கொடி ஏற்றி வைத்ததோடுஇனிப்புகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மகளிர் அணியினர் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அத்துடன் தேர்தல் தொடர்பான மூன்றாவது வாக்குறுதியையும் வழங்க உள்ளார் என்று தகவல். இதற்கு முன்பு அவர் 10 வாக்குறுதிகளை வழங்கி இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















