திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என்று அண்ணா அறிவாலயத்தில்

by Admin / 28-02-2026 11:41:55am
திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என்று அண்ணா அறிவாலயத்தில்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என்று அண்ணா அறிவாலயத்தில் டி. ஆர். பாலு தலைமையிலான குழுவினருடன் காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கு உட்பட்ட வாக்குகளை பெற்றிருந்தது..இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு -அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை காங்கிரஸ்  பல்வேறு தரப்பிலிருந்தும் திமுகவிற்கு ஒரு நெருக்கடியை கொடுக்கும் விதமாக பொது வெளிகளில் கருத்துக்களை பரப்பி வந்தனர். .டிசம்பரில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்ட பின்பும் இதுவரை திமுக தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்கிற குறைபாடு முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றி கழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் தரப்பில் தகவல்கள் வெளிவந்தன. .ஆனால், இது ஒரு அரசியல் உத்தியாக காங்கிரஸ் பயன்படுத்துவதாக கருதிய திராவிட முன்னேற்றக் கழகம் இது குறித்து எந்த விதமான பதிலும் சொல்லாமல் அமைதி காத்தது.. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்கிற கருத்தை முன் வைத்தார் .அதுவே கட்சியின் இறுதி கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டு.. காங்கிரசிற்கு தொகுதிகளை ஒதுக்க தயார் அதுவும் முன்பு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து கொஞ்சம் தொகுதிகளை குறைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால் ,அவர்களுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டிய நிலை வந்திருப்பதால், கூட்டணியில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற கருத்தை முன் வைத்தது.. பேச்சுவார்த்தைக்கு முன்னால் திமுக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் தாங்கள் அதிகம் தொகுதி  கேட்க உள்ளதாக செய்திகளை உலா விட்டு வந்த நேரத்தில்.... தி.மு.க, இப்பொழுது கொடுத்த தொகுதிகளில் இருந்து கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்கிற கருத்தை முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கிய இந்திய முஸ்லிம் லீக் கட்சியிடம் இருந்து ஆரம்பித்தது.. மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இந்த நிலையில் இப்பொழுது கூட்டணியில் இருக்கின்ற மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியோடு பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.. இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடத்தப்படலாம் என்றும் தெரிகிறது.. இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் இடம்பெற்ற சிறிய கட்சிகளான தனியரசின் கொங்கு கட்சி, தமீமுன் அன்சாரி முஸ்லிம் கட்சி, கருணா சின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்த நிலையில், அதனோடு அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவருடன் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் போன்றோரும் திமுகவில் இணைந்த பின்னர் அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக இருப்பதினால், இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையில் உள்ள கட்சிகளிடம் இருந்து ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த இடங்களில்  சிலவற்றை வாங்கும் முயற்சியில்தான் திமுக ஈடுபட்டு இருக்கிறது. தவிர, திமுகவிடமிருந்து அந்த கட்சிகள் அதிக தொகுதிகளை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டாலும் அது சாத்தியப்படமா என்கிற கேள்வி எழுகிறது.. பலமான கூட்டணியாக  திமுக- அதிமுக கூட்டணி இருதரப்பு மட்டுமே மிகப்பெரிய வலுவான நிலையில் உள்ளது.. தமிழக வெற்றி கழகத்தின் விண்ணப்ப படிவம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், திரும்பி வந்த விண்ணப்ப படிவம் குறைவாக இருந்ததின் காரணமாகவும் அங்கே ஒரு தேக்கமான ஒரு சூழல் நிலவி வருகிறது.. ஆக, திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் கூட்டணி வெளியேறிவிடும் என்கிற பேச்சு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.. காங்கிரசுக்கு ,திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கப் போகிறது என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும்.

 

திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என்று அண்ணா அறிவாலயத்தில்
 

Tags :

Share via