தந்தையின் இரண்டு கால்களையும் உடைத்த மகன்கள் -நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காகஆட்சியர் அலுவலக நுழைவுப்பகுதியில் இரண்டு கால்களிலும் கட்டுப்போட்டு அமர்ந்திருந்த விவசாயியிடம் மாவட்ட ஆட்சியர் அருணா நலம் விசாரித்து மனுவை பெற்று கொண்டார். விசாரணையில், சொத்து தகராறில் முதியவரான செல்லதுரையை அவர் முதல் மனைவியின் மகன்கள் தாக்கியது தெரியவந்துள்ளது. அதன்படி சொத்துக்காக இரு கால்களையும் மகன்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து அந்தப்பகுதி போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்தது.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : தந்தையின் இரண்டு கால்களையும் உடைத்த மகன்கள் -நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்